காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்களை அப்புறப்படுத்தும் போலீஸ்.. தொடரும் பதட்டம்
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் யாரும் கூட வேண்டாம் என தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் யாரும் கூட வேண்டாம் என தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.

ஆனாலும் மருத்துவமனை முன் தொண்டர்கள் தொடர்ந்து கூடி வருகிறார்கள். நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
அவருக்கு மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டு பின் குணமானது.
இந்த நிலையில் தற்போது ஒலிப்பெருக்கி மூலம் திமுக தொண்டர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். காவேரி மருத்துவமனை முன் போலீஸ் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தடுப்பு வேலிகள் அமைத்து, ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவமனை அருகே கூடிய திமுக தொண்டர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications