அமராவதி ஆற்றுப் படுகையை தூர்வாரிய நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்கு
Recommended Video

சென்னை: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 பேர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் 13 பேரையும் சிறைப்படுத்துவதற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டபோது இவ்வழக்கில் சிறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறையினரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதின் பேரில் 13 பேர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மணல் கொள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது,
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) August 26, 2018
கருர், அமராவதி ஆற்றில் #நாம்தமிழர் கட்சியின் #சுற்றுச்சூழல்_பாசறை தூர்வாரினால் கூட தவறுதான் !!
நெகிழிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை படுத்தும் பணியில் ஈடுப்பட்ட அனைவரும் கைது pic.twitter.com/lRV1ICyrLu
மேலும், அரசும் பொதுப்பணித் துறையினரும் செய்யவேண்டிய வேலையை பொதுமக்களே செய்துள்ளனர். இதற்காக கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்துவதா என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதியப்பட்டுள்ளவர்களின் விவரம்
1. சு. இரமேசு
2. செல்வ நன்மாறன்
3. ப.கார்த்திக்
4. லோகேஸ்.
5. பாபு
6. மதுபாலா
7. மாவடியான்
8. து.பாபு
9. சரவணன்
10. மோகன்
11. சசிகுமார்
12. கோபி
13. குழந்தைவேல்
இவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து முழுமையாக மீட்க வழக்கறிஞர் பாசறை குழு துரிதமாக செயற்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications