For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல்துறை முறைகேடு குறித்து பேஸ்புக்கில் வைரல் வீடியோ வெளியிட்ட எஸ்.ஐ திடீர் தற்கொலை முயற்சி!

தமிழ்நாடு காவல் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் குறித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட போலீஸ் அதிகாரி, மேலதிகாரிகள் தொல்லை தாங்காமல் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வைரல் வீடியோ வெளியிட்ட எஸ்.ஐ திடீர் தற்கொலை முயற்சி!

    கோயம்புத்தூர்: தமிழ்நாடு காவல் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் குறித்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஸ்ரீகாந்த் ஜெயஸ்ரீ என்ற போலீஸ் அதிகாரி.

    லஞ்சம் வாங்கும் விவகாரத்தில் இவர் மேலதிகாரிகளுக்கு சரியாக ஒத்துழைக்காததால் அடிக்கடி இடம் மாற்றப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது மேலதிகாரிகளிடம் அடிக்கடி புகார்களும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    தற்போது இவர் மேலதிகாரிகள் தொல்லை தாங்காமல் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இவர் மிகவும் மோசமான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் பேசிய அந்த வீடியோ இன்னும் வைரல் ஆகி வருகிறது.

     லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரி

    லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரி

    கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப்புதூர் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஸ்ரீகாந்த் ஜெயஸ்ரீ. இவர் 4 வது படைப் பிரிவில் முதலில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.மிகவும் நேர்மையான அதிகாரியான இவர் பணிக்கு சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்குவதற்கு எதிராக பேசி வந்திருக்கிறார். இவரிடம் லஞ்சம் ஊழலுக்கு துணை போகும்படி அவரது உயர் அதிகாரிகள் அடிக்கடி கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

     லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரி

    லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரி

    கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப்புதூர் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஸ்ரீகாந்த் ஜெயஸ்ரீ. இவர் 4 வது படைப் பிரிவில் முதலில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.மிகவும் நேர்மையான அதிகாரியான இவர் பணிக்கு சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்குவதற்கு எதிராக பேசி வந்திருக்கிறார். இவரிடம் லஞ்சம் ஊழலுக்கு துணை போகும்படி அவரது உயர் அதிகாரிகள் அடிக்கடி கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

     இடம் மாற்றப்பட்ட ஸ்ரீகாந்த்

    இடம் மாற்றப்பட்ட ஸ்ரீகாந்த்

    அவர்களின் தவறுக்கு உதவாமல் இவர் தொடர்ந்து மறுத்து வந்ததை அடுத்து இவர் மீது உயர் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 4 வது பட்டாலியன் பிரிவில் இருந்த இவர் 2015ல் 7 வது படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பின் இவர் குடும்ப சூழ்நிலையை கூறி மீண்டும் இருந்த இடத்திற்கே 2016 ல் திரும்ப வந்திருக்கிறார். ஆனால் இங்கு வந்த பின்பும் கூட எதுவும் மாறாமல் எப்போதும் போல நிறைய குளறுபடிகள் நிகழ்ந்து இருக்கின்றன.

     பணத்தில் நடந்த முறைகேடு

    பணத்தில் நடந்த முறைகேடு

    இந்த நிலையில் அங்கு நிறைய பண மோசடிகள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. போலீஸ் உணவகத்திற்கு உணவு வாங்குவதில் நிறைய போய் கணக்குகள் கட்டப்பட்டிருக்கின்றன. சுப்பிரமணி என்ற அதிகாரியால் மாதமாதம் 15000 வரை பொய் கணக்கு காட்ட இவர் வற்புறுத்தப்பட்டிருக்கிறார். சமயங்களில் இவர் மறுக்கவே அந்த மேல் அதிகாரி இவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் புகார் கொடுத்தும் அதன் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கிறார்.

     ஒத்துழைக்காத ஸ்ரீகாந்த்

    ஒத்துழைக்காத ஸ்ரீகாந்த்

    இவர் புகார்களின் மீது நடவடிக்கை இல்லாததால் மனமுடைந்து போய் இருக்கிறார். மேலும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து இருக்கின்றனர். இவர் ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அனைத்து தவறுகளையும் வெளியே சொல்லும் முடிவை எடுத்து இருக்கிறார். இதையடுத்து அங்கு நடக்கும் அனைத்து குற்றங்களையும் பற்றி வீடியோவாக பேசி பேஸ்புக், வாட்ஸாப்க்களில் பரப்பி இருக்கிறார். இதையடுத்து இவருக்கும் மற்ற மேல் அதிகாரிகளுக்கும் இடையில் இன்னும் பிரச்சனை அதிகம் ஆகி இருக்கின்றது.

     எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

    எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

    இதையடுத்து இவருக்கு தொந்தரவுகள் மேலும் அதிகம் ஆக தொடங்கி இருக்கிறது. நிறைய மிரட்டல்கள் வந்திருக்கிறது. தொல்லைகளை சமாளிக்க முடியாத ஸ்ரீகாந்த் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து வீட்டில் இருந்த மாட்டு சாண பொடியை மொத்தமாக வாயில் கொட்டி முழுங்கி இருக்கிறார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது உடல் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அனுப்பிய வீடியோ இன்னும் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. காவல் துறைக்கு உள்ளேயே இவ்வளவு பிரச்சனைகள் நடப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Tamil Nadu police sub-inspector got hospitalised Coimbatore after he tried to kill himself following his video about corruption in his police department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X