For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் போலீஸ் விசாரணை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு மாநிலங்களில் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக குறிப்பிட்ட ரயில் புறப்பட்ட பெங்களூருக்கும், ரயில் சென்னைக்கு அடுத்ததாக செல்லவிருந்த ஆந்திர மாநிலத்துக்கும், ரயில் சென்று சேரும் அசாம் மாநிலத்துக்கும் சிபிசிஐடி போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

Police team visit 4 states to invetigate Chennai blast

பிகாரில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வகை குண்டுதான் சென்னை ரயில் நிலையத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த கோணத்தில் விசாரிப்பதற்காக மற்றொரு குழு பிகார் விரைந்துள்ளது.

இதனிடையே, சென்னைக்கு ரயில் வரும் முன்பாக, அரக்கோணத்தின் அருகே அந்த ரயில் சிறிது நேரம் நடுவழியில் நின்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. குவஹாத்தி ரயிலுக்கு முன்பாக மைசூரிலிருந்து சென்னை வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலின் அபாய சங்கிலியை யாரோ பிடித்து இழுந்துள்ளனர்.

இதனா் அரக்கோணம் அருகேயுல்ள மகேந்திரவாடி மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் யார் அதை இழுத்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ரயில் தண்டவாளத்தில் நின்றதால் பின்னால் வந்த கவுஹாத்தி ரயிலும் அதிகாலை 5.33 மணி முதல் 5.39 மணிவரை நடுவழியில் நிறுத்தப்பட்டது.

வெடிகுண்டு வைத்த குற்றவாளி கவுஹாத்தி ரயிலில் இருந்து கீழே இறங்குவதற்காக இதுபோன்ற நாடகம் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

English summary
Special Investigation Teams visit four states including Karnataka, Andrapradesh to probe the twin bomb blasts that rocked the Bangalore-Guwahati Express, leaving a woman dead and 14 others injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X