கதிராமங்கலத்தில் வீட்டுக்கு வீடு போலீஸ் நிற்பதால் பெண்கள் அச்சம் : இயக்குனர் கவுதமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிராமங்கலத்தில் காவல்துறை வீட்டுக்கு வீடு நிற்பதாக புகார் வந்துள்ளது என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், கதிராமங்கலத்தில் பெட்ரோல் மட்டும் எடுக்கவில்லை. அங்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கவும் முயற்சி செய்கிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Police threatening Kathiramangalam villagers says Gouthaman

கதிராமங்கலத்தில் போலீஸ் குவிந்துள்ளது. ஈழத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு அடக்குமுறை நடப்பது போல கதிராமங்கலத்தில் மிகப்பெரிய அடக்குமுறை நடக்கிறது.

அங்கு வீட்டுக்கு வீடு போலீஸ் நிற்பதால் பெண்கள் பக்கத்து வீடுகளுக்கு கூட போக முடியவில்லை. இளைஞர்கள் வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை. இதனால் பெண்களும், இளைஞர்களும் அச்சமடைந்துள்ளனர்.

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து முற்றுகையிடப்போவதாக ஒரு வதந்திதான் பரவி வருகிறது. அது நிஜமாகவே உண்மையாகி விடும் என்றும் வ.கவுதமன் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் நிபந்தனை விதிக்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director Va.Gouthaman said heavy police presence Kathiramangalam village, residents of the village could not venture out onto the streets. Only policemen were getting down and boarding the buses. The streets wore a deserted look.
Please Wait while comments are loading...