For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சயானை சந்திக்க கேரள போலீசாருக்கு அனுமதி மறுத்தது ஏன்? மருத்துவமனை பரபரப்பு விளக்கம்

கொடநாடு கொள்ளை மற்றும் கொலையில்,சம்பந்தப்பட்ட சயான் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.அவரைச் சந்திக்க இன்று வந்த கேரள போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத

By Devarajan
Google Oneindia Tamil News

கோவை:கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சயான் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்த நிலையில்,சயானை சந்தித்து விசாரிக்க வந்த கேரள மாநில போலீசாருக்கு,மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துள்ளது.

முறையான ஆவணங்கள் இல்லாமல் கேரளா காவல்துறையினர் விசாரணை செய்ய வந்ததால் அனுமதிக்கவில்லை என கோவை தனியார் தலைமை மருத்துவர் சுந்தராஜன் தெரிவித்தார்.

Police were not allowed by the Doctors to investigate Sayan regarding Kodanad murder

கடந்த 29ம் தேதி சயான் வந்த கார் விபத்துக்குள்ளானதில் மனைவி வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த சயானுக்கு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சயானை சந்திக்க வந்த கேரளா போலீசாருக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜன், சயானின் உடல் நிலை நலமுடன் இருப்பதாகவும், தீவிர
சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான அனுமதியுடன் சயானை சந்திக்க வந்தால் கேரள
போலீசாருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் இரு முறை வந்த போதும் கேரள போலீசார் முறையான அனுமதி இல்லாமலும், உள்ளூர் காவல் துறை அனுமதி இல்லாமலும் சயானை சந்திக்க வந்ததால் அனுமதி வழங்கவில்லை என்றும் மருத்துவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,"சயானுடன் உறவினர்கள் யாரும் இல்லை, தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம்." என்றார்.

English summary
Police were not allowed by the Doctors to investigate Sayan regarding Kodanad murder and robbery case, Sayan who injured in car accident and now undergoing treatment in Kovai private hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X