ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும்.. சொல்கிறார் மு.க.அழகிரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என அழகிரி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Political changes will come by Rajinikanth: MK Azhagiri

அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு முக அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். ரஜினி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் அழகிரி கூறினார்.

ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் முக அழகிரி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Azhagiri wishes Rajinikanth for his political arrival. Azhagiri says Political changes will come by Rajinikanth

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற