அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்தார் பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முதல் செய்திக் குறிப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். கண்காணிப்பில் உள்ளார் என்ற இரண்டாவது செய்திக் குறிப்பை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது. முதல்வருக்கு சில தினங்களுக்கு ஓய்வு தேவை என்றும் எனவே மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் ஞாயிறன்று தெரிவித்தனர்.

அவ்வப்போது முதல்வர் நலமாக உள்ளார் என்ற செய்திக் குறிப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதனிடையே, ஜெயலலிதா உடல்நலம் குறித்தும் அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார் என்ற பல்வேறு தகவல்கள் பரவினாலும், அதனை அதிமுக மேலிடம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications