பொங்கலுக்கு ஸ்பெஷல் பஸ்கள்- 29 கவுன்டர்களில் ஜன 9 முதல் ரிசர்வேசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு 300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார்களுக்கு 044-24794709 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து 2 கவுன்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு முன்பதிவு கவுன்டர் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் வரும் 9ம் தேதி அமைக்கப்படுகிறது. பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார்களுக்கு 044-24794709 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு பஸ்கள்

சிறப்பு பஸ்கள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வசதியாக இந்த ஆண்டு 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நேரத்தில் சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விழாவை கொண்டாடுவது வழக்கம்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இந்த 3 நாட்களில் தினமும் இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் முறையே 11ல் 796 சிறப்பு பஸ்கள், 12ஆம் தேதி 1,980 பஸ்கள், 13ஆம் தேதியன்று 2,382 பஸ்கள் என மொத்தம் 3 நாட்களில் 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து 11, 12, 13ம் தேதிகளில் மொத்தம் 10,437 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஜனவரி 15 முதல் சிறப்பு பஸ்

ஜனவரி 15 முதல் சிறப்பு பஸ்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து பிற பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல அதே மூன்று நாட்களில் 7,841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

எங்கிருந்து எங்கே

எங்கிருந்து எங்கே

11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆந்திரா செல்லும் பஸ்கள் அண்ணாநகர் மேற்கில் உள்ள எம்டிசி பஸ் நிலையத்திலும், இசிஆர் வழியாக திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

பயணிகள் கவனத்திற்கு

பயணிகள் கவனத்திற்கு

பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த 4 தட பகுதியில் இருந்து செல்லும் பஸ்களுக்கு 11 முதல் 13ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.

எந்த வழியாக செல்வது

எந்த வழியாக செல்வது

திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நெய்வேலி, திருவண்ணாமலை உள்பட பிற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 11 முதல் 13ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்குழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக செல்லலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

புகார் தெரிவிக்கலாம்

புகார் தெரிவிக்கலாம்

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு 300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில் 29 முன்பதிவு மையங்களும் ஜனவரி 9 முதல் அமைக்கப்பட உள்ளன. பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார்களுக்கு 044-24794709 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu transport Minister MR Vijayabaskar announced on WednesdayFive temporary bus stands would be set up in Chennai to facilitate ease of travel. Traffic authorities have advised other commuters to avoid Tambaram and take diversion via Tirukazhukundam-Sriperumbudur route to avoid congestion.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற