இருளில் மூழ்கிய திருவாரூர், நாகை, காரைக்கால்.. டிரான்ஸ்பார்மர் வெடிப்பு காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே பவித்ரமாணிக்கத்தில் துணைமின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டிரான்பார்மரை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

power cut in Thiruvarur, nagai, karaikal

பவித்ரமாணிக்கத்தில் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர், நாகை மாவட்டத்தில் மின் தடை நீங்கியது. மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கதிராமங்கலத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திடீர் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
sudden power cut in Thiruvarur, nagai, karaikal due to Transformer explosion
Please Wait while comments are loading...