துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.2 அலகுகள் பதிவு- இஸ்தான்புல் குலுங்கியது!
இஸ்தான்புல்: துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் இன்று பிற்பகல் 3.19 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 80 கிமீ தொலைவில் சிலிவ்ரி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் இஸ்தான்புல் அச்சமூட்டும் வகையில் குலுங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
6.2 Earthquake in Istanbul, Turkey
— Disasters Daily (@DisastersAndI) April 23, 2025
All networks are currently down, people are scared to go back to their homes
There were 6 stronger aftershocks. pic.twitter.com/dnco5ndj3Z
துருக்கியில் அண்மைகாலத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது. இதனால் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான பாதிப்பு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications