• search

பிரக்யான்: என்.ஐ.டி. திருச்சி நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி

By Siva
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  திருச்சி: என்.ஐ.டி. திருச்சி நடத்தும் பிரக்யான் 2018 நிகழ்ச்சி மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

  என்.ஐ.டி. திருச்சி ஆண்டுதோறும் பிரக்யான் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த பரிமாணம் என்பது தான் இந்த ஆண்டு நிகழ்ச்சியின் தலைப்பு. தென்னிந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய டெக்னோ-மேனேஜரியல் விழா இது தான்.

  Pragyan: The Biggest Techno-Managerial Fest In South India To Begin At NIT Trichy!

  நீதிமன்ற அறைகளில் புகழ்பெற்று விளங்குபவரும், வழக்கறிஞர் தொழிலை தாண்டி பல்வேறு மீடியாக்களில் கட்டுரைகள் எழுதி வருபவருமான, சூரித் பார்த்தசாரதியை பிரக்யான் கிராாஸ்ஃபையர் 2018, நிகழ்ச்சிக்கு, நெறியாளராக, ஏற்பாடு செய்துள்ளது பிரக்யான், என்ஐடி திருச்சி.

  கூடுதல் விவரங்களுக்கு www.pragyan.org/18/home/crossfire/ வெப்சைட்டை பார்க்கவும்.

  கிராஸ்ஃபையர் 1

  இவ்வாண்டு கிராஸ்ஃபையர் நிகழ்ச்சியின் முதல் குழுவை அறிமுகம் செய்கிறோம். ஓய்வு பெற்ற மேஜரும், ராணுவ தலைமையகத்தின், முன்னாள் உதவி டி.ஜி (ஒழுக்கம் மற்றும் கண்காணிப்பு) மற்றும் சைபர் சட்டம் மற்றும் பாதுகாப்பு பிரிவு நிபுணருமான சுதீர் வோம்பட்கெரே குழுவில் உள்ளார். ஆதார் வழக்கில் முக்கிய மனுதாரர்களில் இவரும் ஒருவர். தேசிய மக்கள் இயக்க கூட்டணி மற்றும் சிவில் சுதந்திரத்திற்கான மக்கள் சங்கம் ஆகியவற்றில் முழு அளவிலான உறுப்பினராக உள்ளார்.

  கூடுதல் விவரங்களுக்கு www.pragyan.org/18/home/crossfire/ வெப்சைட்டை பார்க்கவும்.

  கிராஸ்ஃபயர் 2-

  தக்சஷீலா கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் செல்வி. மானசா வெங்கடராமன் இந்த பேச்சாளர் குழுவில் இடம்பெற்று இருக்கிறார். இவர் அரசியலமைப்பு குறித்தும் சர்வதேச சட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருபவர்.

  இவரது சக்திவாய்ந்த கருத்துக்கள் மற்றும் பேச்சு மூலம் இந்த நிகழ்வு புதிய பரிணாமத்தை அடையும்.

  மேலும் தகவலுக்கு www.pragyan.org/18/home/crossfire/ பக்கத்தை பார்க்கவும்

  கிராஸ்ஃபயர் 3-

  டெல்லி ஐஐடியில் மனிதவள மற்றும் சமூக அறிவியல் துறையின் துணை பேராசிரியராக இருக்கும் செல்வி.ரீதிகா கேரே பேச்சாளர் குழுவில் இடம்பெற்று இருக்கிறார். பொருளாதார நிபுணரும், சமூக அறிவியலாளருமான இவர், சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளில் குரல் கொடுத்து இருக்கிறார். இவரது பங்கேற்பு இந்த நிகழ்வை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும்.

  கிராஸ்ஃபயர் 4

  பிரக்யான் கிராஸ்ஃபயர் குழுவில் லேட்டஸ்டாக திரு. ஷியாம் திவானை சேர்த்துள்ளது என்ஐடி திருச்சி. அவரின் திறமை, அறிவு, அனுபவம், வாதாடும் திறன் ஆகியவை நிச்சயம் உங்களை கவரும்.

  #Pragyan #Crossfire #CivilRights #TheNextDimension #LetsCelebrateTechnology

  கிராஸ்ஃபயர் 5

  பிரக்யான் 18 நிகழ்ச்சியின் கிராஸ்ஃபயர் பேச்சாளர்கள் குழுவில் திரு. ஆனந்த் கிருஷ்ணன் சேர்ந்துள்ளார். அவர் இந்திய செக்யூரிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் (DSCI) கொள்கை தயாரிப்பாளர். திரு. கிருஷ்ணன் டேட்டா அனாலிசிஸ் மற்றும் டேட்டா பாதுகாப்பு துறையில் வல்லவர். இந்த பிரக்யான் நிகழ்ச்சியில் அவரின் திறமையை கண்கூடாக காண முடியும்.

  #Pragyan #TheNextDimension #Crossfire#LetsCelebrateTechnology #DataSecurity#DataAnalysis

  கிராஸ்ஃபயர் 6

  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கூட்டு தளத்தின் தலைவராக இருக்கும் திரு. தேபபிரதா நாயக் சைபர் மற்றும் செக்யூரிட்டி நிபுணர் ஆவார். இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். கிராஸ்ஃபயர் குழுவில் தேபபிரதா நாயக்கை சேர்ப்பதில் பிரக்யான் பெருமை கொள்கிறது.

  #Pragyan #LetsCelebrateTechnology#TheNextDimension #Crossfire #Panelist#DigitalIndia

  English summary
  Pragyan is the ISO 9001:2015 and ISO 20121:2012 certified student-run techno-managerial organization of National Institute of Technology, Tiruchirappalli (NITT), that conducts an annual techno-managerial festival in the month of February or March. The 14th edition of Pragyan will be held from March 1-4, 2018. T

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more