புதுச்சேரிக்கு நிதி கொடுக்காமல் அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி!

  புதுச்சேரி: நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் என பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

  இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் இளைஞர் காங்கிரஸாருடன் சேர்ந்து பக்கோடா விற்றார்.

  நாராயணசாமி அல்வா கடை

  நாராயணசாமி அல்வா கடை

  பக்கோடா விற்ற நாராயணசாமிக்கு கவுன்டர் கொடுக்கும் புதுச்சேரி பாஜகவினர் 2 நாட்களுக்கு முன்பு ‘நாராயணசாமி‘ என்ற பெயரில் அல்வா கடை திறந்தனர். மக்களுக்கான திட்டங்களை அறிவிக்காமல் முதல்வர் நாராயணசாமி அல்வா கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

  மோடி தான் அல்வா தருகிறார்

  மோடி தான் அல்வா தருகிறார்

  இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புதுச்சேரிக்கு தேவையான நிதியை கொடுக்காமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.

  மாற்றாந்தாய் மனப்பான்மை

  மாற்றாந்தாய் மனப்பான்மை

  மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புதுச்சேரியை பார்ப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  கட்சியின் நிலைப்பாடே

  கட்சியின் நிலைப்பாடே

  அதற்கு பதிலளித்த நாராயணசாமி கட்சியின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்றும் நாராயணசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Puducherry Chief minister Narayanasami has said that Prime Minister Modi only giving halwa. PM Modi is not giving proper fund to Puducherry he said further.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற