கோவை சிறையில் கைதிகள் இடையே பயங்கர மோதல்: கல்லாலேயே அடித்து ஒருவர் கொலை

கோவை: கோவை மத்திய சிறையில், இரண்டு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
பீளமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், அடிதடி வழக்கில் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல அடிதடி வழக்கில் விஜய் என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதாகி இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வகிறார்.

இந்நிலையில் இன்று இருவருக்குள்ளும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதில் கைதி விஜய் ரமேஷை கல்லால் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கைதிகள் எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லாலேயே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!