சேலத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்த்த தி.மு.க, கூட்டணி கட்சியினர் மீது போலீஸ் வழக்கு பதிவு
சேலத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்த்த தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சேலம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க, வி.சி.க.., கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருப்பூர், கோவை, கடலூர் என மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறார். அது போல நேற்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பது, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வது, அரசு அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்து வந்தார்.
இது தமிழக அரசை அவமதிக்கும் செயல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது ஆளுநரின் இந்த செயல் மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சேலத்திலும் தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநரின் வருகையை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென் போராட்டம் நடத்தினர். இதில் ஆளுநருக்கு கறுப்பு கொடியும் காட்டப்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானவர்கள் மீது அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுதல் (341), சட்ட விரோதமாக தடுத்தல் (143), தடையை மீறி சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுதல் (188) ஆகிய 3 பிரிவுகளில் சேலம் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications