For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினாவில் காவிரிக்காக போராடி கைதானவர்கள் யார்? உளவுத்துறை தீவிர விசாரணை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் ஒன்றுதிரண்ட இளைஞர்கள்

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முகநூலின் மூலம் இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இன்று 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர். அவர்களின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கினர்.

    Protest in Marina beach over Cauvery issue

    தீவிர கண்காணிப்பை தாண்டி எப்படி கடற்கரைக்கு அவர்கள் வந்தனர் என்பது பற்றி விவேகானந்தர் இல்லம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் அடிப்படையில், அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆண், பெண்களை கைது செய்தனர்.

    போராட்டக்காரர்கள் ஏதேனும் அமைப்புகளை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. உளவுத்துறை இதுபற்றி விசாரிக்கிரது. மீண்டும் இதுபோன்ற போராட்டம் வெடிக்காமல் இருக்க போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Police are coming to search the people in Marina with the help of their photos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X