For Daily Alerts
சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்சியை எரித்து எதிர்ப்பு காட்டிய போராட்டக்காரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்சி எரிப்பு-வீடியோ
சென்னை: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் பனியனை எரித்து போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக் கூடாது என்று அரசியல் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று இரவு 8 மணிக்கு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையே போர்க்களமானது. இந்த போராட்டத்தின்போது ஐபிஎல் டிக்கெட்டுகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரதிபலிக்கும் மஞ்சள் பனியன்களை எரித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!