திமுக ஆட்சியில் கமல் எங்கேயிருந்தார்- கேட்கிறார் அமைச்சர் சிவி. சண்முகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் முதல்வர் விழாவில் பங்கேற்ற அஜித், நடிகர்களை மிரட்டுவதாக பேசிய போது கமல் எங்கு சென்றார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரைவிட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருக்கிறது என்றும் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

Prove corruption charge Minister CV Shanmugam tells Kamal

மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார் என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல், அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி என்பதைத் தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..என்றும் பதிவிட்டுள்ளார்.

கமலின் பேட்டி அதற்கு திமுகவின் ஆதரவு ஆகியவை அமைச்சர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் பலரும் கமலுக்கு கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

Kamal Hassan has more responsibility says Karunas MLA-Oneindia Tamil

சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகர்களை மிரட்டுவதாக திமுக ஆட்சியில் முதல்வர் விழாவில் அஜித் பேசிய போது கமல் எங்கு சென்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal hassan had reportedly said that there was corruption in various government departments in the state.Reacting to the allegation,Minister CV Shanmugam said Kamal Haasan started talking about many things without any evidence.
Please Wait while comments are loading...