ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே பிரச்சனை இருந்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி அரசு விவகாரங்களில் தலையிடுவதாகவும் அரசை செயல்படாமல் தடுப்பதாகவும் அவர் மீது அரசு தரப்பில் குற்றச் சாட்டு எழுந்தது.

Puducherry governor Kiran bedi acting as Queen: Chief minister Narayanasami

ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு உரிமையில்லை என்றும் அவர் கூறினார். மக்கள் நலத்திட்டத்தை நிறைவேற்ற மக்களால் தேர்வானர்வர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

மேலும் வருமான வரித்துறைக்கு சோதனை நடத்த அதிகாரம் உண்டு என்று கூறிய நாராயணசாமி, ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry governor Kiran bedi acting as Queen said Chief minister Narayanasami.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற