அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களில் எந்த கட்சிக்கு ம.ந.கூ. ஆதரவு ?
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி எந்த கட்சிக்கு ஆதரவு தரும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். வைகோவின் இந்த அறிவிப்புக்கு மதிமுக தொண்டர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரவக்குறிச்சியிலாவது மதிமுக போட்டியிட்டிருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

யாருக்கு ஆதரவு?
தேர்தலை புறக்கணிக்கும் மக்கள் நலக் கூட்டணி, யாருக்கு ஆதரவு தரும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை இந்த கூட்டணி ஆதரிக்க வாய்ப்பே இல்லை.

அதிமுக அல்லது தேமுதிக
திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக மக்கள் நலக் கூட்டணி ஆதரவு தரக் கூடிய வாய்ப்பு உள்ளது. 3 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடுவது என முடிவெடுத்து ஆதரவை கோரினால் அக்கட்சிக்கு ஆதரவு தருவது குறித்தும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பரிசீலிக்கலாம்.

பிரதிபலன்?
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. இதற்கு பிரதிபலனாக தேமுதிகவை மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரிக்கலாம்.

விஜயகாந்த் ஆலோசனை
இதனிடையே 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து 'ரகசியமாக' ஆலோசனை நடத்தி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்த ஆலோசனைகளில் திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்தே போட்டியிடலாம் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications