முதல் முறையாக எம்.பியாகி டெல்லி செல்லும் வக்கீல் சுதா.. பாதயாத்திரையில் ராகுல் உடன் பயணித்தவர்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வக்கீல் ஆர் சுதா, முதல் முறையாக எம்.பியாக நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். தபால் வாக்குகளையும் சேர்த்து 10,88,182 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகள், பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகள் பெற்று, அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். 8,695 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னதாக மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை அதிக தாமதம் செய்தது. இந்த தொகுதியில் ராகுல் காந்திக்கு பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. மேலும், மணிசங்கர் ஐயர் தனது மூத்த மகள் சுரண்யா ஐயரை மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட விரும்பம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது மகளை வேட்பாளராக்க முயன்றதாக கூறப்பட்டது. திருச்சி எம்.பியாக இருந்த திருநாவுக்கரர், மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்ததாக தகவல்கள் வெளியாகின. பெரும் காத்திருப்புக்குப் பிறகு வக்கீல் சுதா, மயிலாடுதுறை வேட்பாளர் ஆனார்.
மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தவர் வக்கீல் ஆர்.சுதா ராமகிருஷ்ணன். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா நடந்து சென்றிருந்தார். இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவப்படம் எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைமையின் கண்டிப்புக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி திமுக, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தாலும் தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒரு நபரான சுதாவை அங்கு வேட்பாளராக்கியது காங்கிரஸ் கட்சி. இதனால் அதிருப்தி நிலவுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவில் 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளார் சுதா ராமகிருஷ்ணன்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications