சீர்திருத்தவாதி பெரியாருக்கு வாழ்த்துகள்- டுவிட்டரில் ராகுல் காந்தி, லாலு, சித்தராமையா #HBDPeriyar

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி துனைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக துணை முதல்வர் ஒபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. #HBDPeriyar, #periyar139 ஆகியவை தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.

ராகுல் காந்தி

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில், பெரியார் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி என புகழாரம் சூட்டியுள்ளார்.

சித்தராமையா

அதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் டுவிட்டர் பக்கத்தில், பெரியார் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர். அவரது சிந்தனைகள் நாட்டுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன என கூறியுள்ளார்.

லாலு பிரசாத்

சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வாழ்த்துகள் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜேடி எம்.பி

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் எம்.பி ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ், தன் டுவிட்டர் பக்கத்தில் பெரியாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பின்பும் அவர் கற்பித்தவை நாட்டுக்குத் தேவை எனக் குறிப்பிட்டிருப்பது சுயமரியாதை இயக்கத்தின் தேவையை உணர்த்துவதாகவே உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress party Vice-President Rahul Gandhi and Karnataka CM Seetharamaiah, Lalu and Jai prakash N. Yadav M.P wished Birthday wishes to Periar in their twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற