கருணாநிதி வைர விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாள் விழா சென்னையில் ஜூன் 3-ல் நடைபெற உள்ளது.

 Rahul Gandhis will participation in Karunanidhi's diamond jubilee function

இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதனிடையே கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ராகுல்காந்தி ஜூன் 3-ல் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
congress vice president Rahul Gandhis will participation in Karunanidhi's diamond jubilee function
Please Wait while comments are loading...