மத்திய அரசுக்கு எதிராக நான் எழுதுவதையும் பேசுவதையும் தடுக்க முடியாது - ப.சிதம்பரம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக நான் எழுதுவதையும் பேசுவதையும் வருமான வரித்துறை சோதனை மூலம் தடுக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் வீடு, டெல்லி,நொய்டா, காரைக்குடி உள்ளிட்ட 14 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கூறிய ப.சிதம்பரம், ''மத்திய அரசு அரசியல்ரீதியான காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

 raid done for political motive and it never stop writing and talking against central government P.Chidambaram

என் மகன், மற்றும் என்னை சார்ந்த அனைவர் மீது நடத்தப்படுமிந்த சோதனை அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. மத்திய அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது. இவ்வாறு சோதனைகள் மேற்கொள்வதன் மூலம், மத்திய அரசுக்கு எதிராக நான் பேசுவதையோ எழுதுவதையோ நிறுத்தமுடியாது'' என கூறியுள்ளார்.

பாஜக மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ்கட்சி பிரதமர் மோடியை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது இல்லை என்றும் அரசின் கொள்கை முடுவுகளை விமர்சிப்பது என்று முடுவு எடுத்திருக்கும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex. Cabinet minister P. Chidambaram told that raid done for political motive and it never stop writing and talking against central government.
Please Wait while comments are loading...