மதுரை மாவட்டம் மேலூரில் ஜில் ஜில் மழை.. மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மேலூரில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain in Madurai Melur surrounding area: People happy

இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில்லென பெய்யும் மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இதனால் இதமான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain in Madurai Melur surrounding area. People are happy with the rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற