For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா அடடா கன மழைடா.. அக்னி தொடங்கிய முதல்நாளே ஸ்ரீவில்லிபுத்தூரில்.. மக்கள் மகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கத்தைவிட இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து வெயிலின் அளவு அதிகரித்து வந்தது.

Rain surprises residents

இந்நிலையில், கத்தரி எனக் கூறப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பித்துள்ளது. இப்போது உள்ளதைவிட கத்தரியின் போது, வெயிலின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் திடீரென கோடைமழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன், கனமழை பெய்ததால், வெப்பம் சற்று தணிந்தது.

அக்னி தொடங்கிய முதல் நாளிலேயே கொட்டித் தீர்த்த இந்த திடீர் கனமழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Srivilliputhur experienced heavy showers on Wednusday evening that brought relief from the scorching heat wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X