சென்னை மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.. இரவு நேரங்களில் மிதமான மழைக்குத்தான் வாய்ப்பு: வானிலை மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாகுலேயன் தம்பி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

Rain will get reducing in Chennai

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரில் கனமழை பெய்யும்.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும். வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு. அடுத்த 3 நாட்களுக்கு பிறகு அந்தமான் பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழைக்கான வாய்ப்பு உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கே அதிகம் இருக்கிறது என்பதால் சென்னைவாசிகள் சற்று பெருமூச்சுவிட்டுக்கொள்ளலாம். அடுத்த மழையை வரவேற்க தயாராகலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain will get reducing in Chennai for the coming days, says weather department.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற