For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே தனது சுய ரூபத்தைக் காட்டி விட்டார்.. வாசன் சாடல்

Google Oneindia Tamil News

Rajapakse has exposed his real face, chides Vasan
ஈரோடு: இந்தியாவுக்கு வந்து மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்று, நல்லெண்ண அடையாளமாக மீனவர்களை விடுவிப்பதாகவும் கூறிய ராஜபக்சேவின் உண்மையான முகம், மீனவர்களின் தொடர் கைது மூலம் அம்பலமாகியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படித் தெரிவித்தார்.

24 மணி நேரத்தில் 131 மீனவர்கள் கைது

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கடந்த 24 மணி நேரத்திற்குள் 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 750 விசைப்படகுகளில் 900க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை படையினர் 45 மீனவர்களை கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் நாகையைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், தலைமன்னார் பகுதியில் ராமாநாதபுரத்தைச் சேர்ந்த 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 131 மீனவர்களும், 26 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். எஞ்சிய 78 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கை காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னாரில் 46 மீனவர்களிடமும், யாழ்ப்பாணத்தில் 32 மீனவர்களிடமும் இலங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Former union minister G K Vasan has chided that Lankan president Rajapakse has exposed himself of his real face in the arrest of TN fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X