அரசியல் கட்சிகள் மல்லுக்கட்ட உள்ள ஆர்கே.நகரில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்களார்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் ஆணையஙர் ராஜேஷ் லக்கானி வெளிட்டுள்ளார். அதன்படி அங்கு 2லட்சத்து 62ஆயிரத்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே.நகர்.தொகுதியில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சசிகலா தரப்பு அதிமுக, ஓபிஎஸ் தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உள்ளிட்டக் கட்சிகள் போட்டியிட உள்ளன.

ஆர்கே.நகரில் பலத்தை காட்ட அரசியல் கட்சிகள் தீயாக வேலை செய்ய தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்? எத்தனை வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்பது குறித்த தகவல்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையர்அ ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.

2,62,721 வாக்காளர்கள்

2,62,721 வாக்காளர்கள்

அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,62,721 பேர் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதில் ஆண் வாக்காளர்கள் 1,28,305 பேரும், பெண் வாக்காளர்கள் 1,34,307 பேர் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

256 வாக்குச்சாவடி மையங்கள்

256 வாக்குச்சாவடி மையங்கள்

மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 51 இடங்களில் 256 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்றும், தேர்தலுக்கான 1,024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

23ஆம் தேதி கடைசி நாள்

23ஆம் தேதி கடைசி நாள்

ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஏராளமான சுயேட்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய 23ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஏப்ரல் 15ஆம் தேதி முடிவு

ஏப்ரல் 15ஆம் தேதி முடிவு

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தினமும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வரும் ஏபரல் 15ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Chief Election Commissioner Rajesh lakhani said that there are 2,62,721 voters in the constituency of R.K.Nagar. They are 1,28,305 male voters, women voters are 1,34,307 said Chief Election Commissioner.
Please Wait while comments are loading...