ரஜினிக்கு பெண்கள், இளைஞர்களிடையே பெரும் ஆதரவு.. நக்கீரன் சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் ஆதரவு காணப்படுவதாக நக்கீரன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார் ரஜினிகாந்த். அவரது வருகையால் மக்களுக்கு நல்லது நடக்குமா என்பது ஒருபுறம் இருக்க, அவரது வருகையால் என்னவெல்லாம் நடக்கலாம் என்ற வாதப் பிரதிவாதங்கள் கிளம்பியுள்ளன. அவரது அரசியல் பிரவேசம் தொடர்பாக கருத்துக் கணிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

நக்கீரன் இதழ் இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தது. இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு அதிக பாதிப்பு என்ற பெயரில் இன்னொரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள்:

இளைஞர்கள் ஆதரவு யாருக்கு

இளைஞர்கள் ஆதரவு யாருக்கு

சர்வேயில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் இப்போது தேர்தல் வந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதிமுக 18 - பாஜக 14

அதிமுக 18 - பாஜக 14

இளைஞர்களில் 18 சதவிகிதம் பேர் அ.தி.மு.க. என்றும், 14 சதவிகிதம் பேர் பா.ஜ.க. என்றும் கூறியிருந்தனர். 8 சதவிகிதம் பேர் பா.ம.க. என்றும் 8 சதவிகிதம் பேர் ம.தி.மு.க. என்றும் பதில் சொன்னார்கள். நாம் தமிழர் என 5 சதவிகிதம் பேரும், "எங்களுக்கு எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லை' என நோட்டாவுக்கு 8 சதவிகிதம் பேரும் ஆதரவளித்தனர்.

ரஜினிக்கு 24%

ரஜினிக்கு 24%

அவர்களிடம் "ரஜினி அரசியலுக்கு வந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு' என கேட்டபோது சர்வேயில் பங்கேற்ற இளைஞர்களில் 24 சதவிகிதம் பேர், "நாங்கள் ரஜினியை ஆதரிப்போம்' எனத் தெரிவித்தனர்.

ரஜினி பக்கம் திரும்புகின்றனர்

ரஜினி பக்கம் திரும்புகின்றனர்

இதில் அ.தி.மு.க., தி.மு.க போன்ற பெரிய கட்சிகளில் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை ஆதரவளித்தவர்களில் குறிப்பிட்ட சதவீதம்பேர் ரஜினி பக்கம் திரும்புவதை கவனிக்க முடிந்தது. இளைஞர்களில் ரஜினி ரசிகர்களைவிட விஜய், அஜீத், சூர்யா போன்றவர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், அரசியல் என்ட்ரி என்ற அளவில் இளைஞர்களிடம் ரஜினிக்கு செல்வாக்கு இருப்பது தெரிகிறது.

பெண்களின் ஆதரவு

பெண்களின் ஆதரவு

தமிழகத்து பெண் வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருப்பதால் அவர்களிடம் எந்த அரசியல் கட்சியின் செல்வாக்கு மேலோங்கியுள்ளது. "எங்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும், அடுத்ததாக ரஜினியைத்தான் பிடிக்கும்' என எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர்.

ஆண்களின் ஆதரவு

ஆண்களின் ஆதரவு

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, ஆண்கள் மத்தியில் அறிமுகமும் செல்வாக்கும் பெற்றுள்ள காங்கிரஸ், பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் பெண்களின் ஆதரவை குறைவாகவே பெறுகின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை அதன் பலம் ஆண்கள், பெண்கள் இருதரப்பிலும் ஏறத்தாழ சமமாகவே உள்ளது.

அதிமுகவுக்கும் கணிசமான ஆதரவு

அதிமுகவுக்கும் கணிசமான ஆதரவு

எம்.ஜி.ஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் அ.தி.மு.க.வின் பெரும்பலம் பெண் வாக்காளர்களே. ஆண்களைவிட பெண்களிடம் அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாகவே அ.தி.மு.க. இப்போதும் இருக்கிறது. சர்வேயில் பங்கேற்றவர்களின் அடிப்படையில், அ.தி.மு.க.வை ஆதரிக்கும் ஆண்களைவிட பெண்கள் 5% கூடுதலாக உள்ளனர். அதுபோலவே, ரஜினியை ஆதரிக்கும் மனநிலை கொண்டோரில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிக்க மாட்டோம்.. நக்கீரன் சர்வேயில் மக்கள் அதிரடி!

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது.. நக்கீரன் கருத்துக் கணிப்பில் மக்கள் பொளேர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nakkeeran survey has said that Rajinikanth has good support among women and youth.
Please Wait while comments are loading...