ரஜினி அரசியல் களத்திற்கு வரட்டும்... ஐயம் வெயிட்டிங் - சீமான் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சீமான், ரஜினியை வேண்டாம் என சொல்ல இவ்வளவு காரணமா?- வீடியோ

  சென்னை: ரஜினி களத்திற்கு வரட்டும் நாங்கள் காத்திருக்கிறோம் என்று சீமான் கூறியுள்ளார். அரசியல் போரில் அவரை ஜெயிக்க விட மாட்டோம் என்றும் சீமான் கூறியுள்ளார்.

  இன்னொரு இனத்தவன் ஆள நாங்கள் அடிமையாக வாழ விரும்பவில்லை. தன்மானத்திற்காக போரிட்டவர்கள். அதை இழந்து வாழ விரும்பவில்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.

  நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் ஒரு தமிழரை முதல்வராக்குவாரா என்றும் கேட்டுள்ளார். அவரது பேட்டியில் பல அதிரடி கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

  ரஜினியை விட மாட்டோம்

  ரஜினியை விட மாட்டோம்

  ரஜினி களத்திற்கு வந்தால் ஜெயிக்க விடுவோமா? விடமாட்டோம். தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்பது தேசிய இனத்தின் இறையான்மை, உரிமை நீங்கள் எப்படி எங்கள் உரிமையில் தலையிடலாம்.

  ரஜினியும் நாட்டை ஆளலாம், நாங்களும் வருகிறோம் யார் சிறப்பாக ஆள்கிறோம் என்று பார்க்கலாம்.
  நாங்கள் மிகப்பெரிய வலிகளை சந்தித்திருக்கிறோம். நான், அன்புமணி, ரஜினி சேர்ந்து பொது விவாதம் நடத்துவோம் அவர் அவரோட கொள்கையை காட்டலாம். யார் ஜெயிக்கிறார் என்று பார்க்கலாம்.

  தமிழரை முதல்வராக அறிவிப்பாரா?

  தமிழரை முதல்வராக அறிவிப்பாரா?

  ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படுகிறார். அது எப்படி? குனிந்து குனிந்து பார்த்துதான் எழுகிறோம். வீழ்ந்து கிடக்கும் எங்களை தூக்கி விட கை நீட்டுங்கள். தந்தை பெரியார் வழியில் நில்லுங்கள்.

  முதல்வராக வாய்ப்பு கொடுத்தும், காமராஜரை ஆதரிக்க சொன்னவர் பெரியார். அதே போல ரஜினி செய்யலாம்.

  துயவரை ஆதரியுங்கள்

  துயவரை ஆதரியுங்கள்

  தமிழ்நாட்டில் சேவை அமைப்பை தொடங்கி ரஜினி சேவை செய்யலாம். என்னையோ, அன்புமணியையோ ஆதரிக்க சொல்லவில்லை. திருமாவளவன் போன்ற தூயவரை ஆதரிக்கலாம். எங்கள் கொள்கைகள், வேலை திட்டம் செயல்பாடுகளில் குறை சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார் சீமான்.

  உரிமை கேட்பது தவறா?

  உரிமை கேட்பது தவறா?

  ரஜினிகாந்த் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நடிகர் என்ற தகுதி தவிர என்ன இருக்கிறது. என் நாட்டை நாங்கள் ஆள வேண்டும் என்று கூறுவது தவறா? என் நிலத்தை நான் ஆள வேண்டும் என்று கேட்பது எங்கள் உரிமை. அந்த உரிமையைத்தான் கேட்கிறோம். ரஜினி எங்களை ஆள வேண்டும் என்று நினைப்பது கொடுமையான இனவெறி.

  தன்மானம் முக்கியம்

  தன்மானம் முக்கியம்

  இன்னொரு இனத்தவன் ஆள நாங்கள் அடிமையாக வாழ விரும்பவில்லை. தன்மானத்திற்காக போரிட்டவர்கள். அதை இழந்து வாழ விரும்பவில்லை. சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று கற்பித்துள்ளார் எங்கள் தலைவர். ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதை விட ஓரு நொடியேனும் சுதந்திரமாக வாழ்வது மேலானது. அதற்காக போராடுவது மேலானது.

  வெற்றிடத்தில் கம்பு

  வெற்றிடத்தில் கம்பு

  சிஸ்டம் சரியில்லை என்றால் எங்கே சரியில்லை. எப்படி சரியில்லை என்று சொல்ல வேண்டும். ஜெயலலிதா இருந்த போதும் சரியில்லைதானே. இப்போது வந்து கூறுவது அப்பட்டமான கோழைத்தனம். வெற்றிடத்தில் கம்பு சுற்றுவது போல உள்ளது ரஜினியின் செயல். ஜெயலலிதா, கருணாநிதி இருந்த போதே களத்தில் இறங்கி எதிர்த்தவர் விஜயகாந்த்.

  திரைக்கவர்ச்சி

  திரைக்கவர்ச்சி

  கதாநாயகனை அவதார புருஷர்களாக நினைத்த காலம் உண்டு. இப்போது அது தேவையில்லை. ஐயா நல்லக்கண்ணு போன்றவர்கள் திரை வெளிச்சத்தில் மறைந்து விடுவார்கள். பெரும்படை வந்தால் சரியாகி விடுமா? தலைவனுக்குத்தான் தெரியும் எதை கொடுக்க வேண்டும் எதை தடுக்க வேண்டும் என்று.

  நான் கத்திருக்கிறேன்

  நான் கத்திருக்கிறேன்

  அன்றைக்கு மராட்டிய சரபோஜிகள் அப்போது எங்கள் முப்பாட்டன்களை சாய்திருக்கலாம். இன்றைக்கும் தஞ்சையில் இருக்கலாம். இப்போதைய அரசியல் போரில் ரஜினியை ஜெயிக்க விடமாட்டோம். ரஜினி களத்திற்கு வரட்டும் ஐயம் வெயிட்டிங் என்று கூறியுள்ளார் சீமான்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Naam Tamilar party leader Seeman has dubbed Rajinikanth as a coward and he had not guts to enter into the Poltics when Jayalalalitha was alive.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற