மாணிக் பாட்ஷாவாக மாறிய ரஜினிகாந்த்... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட போது முற்றிலும் வேறுமுகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

  சென்னை: கடந்த 5 நாட்களாக ரசிகர்கள் மத்தியில் பேசும்போது பவ்யமாக பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், இன்று அவர் வேற லெவல்ல அவரது உடல் மொழி இருந்தது. அதாவது ரஜினி ஸ்டைல்ல சொல்லனும்னா மாணிக் பாட்ஷாவாக மாறிவிட்டார் ரஜினி என்று தெரிந்தது.

  வெள்ளை ஜிப்பா, வெள்ளைதாடி என ஜொலித்த ரஜினியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அத்தனை அழுத்தமானதாக இருந்தது. மேடைக்கு வந்தது முதல், மைக் பிடிப்பதில் தொடங்கி, கண்ணாடியை கழட்டியது, தண்ணீர் குடித்தது, கை அசைத்து பேசியது என இன்று ரஜினி முழுவதும் வேறு உடல்மொழியைப்பார்க்க முடிந்தது. கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னவுடன் ரசிகர்கள் தொடர் கைதட்டலை ரஜினியால் நிறுத்தமுடியவில்லை.

  ரஜினி ரசிகர்களை தொட்டு பேசவில்லை, கை கொடுக்கும் ரசிகர்களுக்கு கை குலுக்கவில்லை என்றெல்லாம் அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சமூக வளைதலங்களில் வைரல் ஆனது. இதுதான் ரஜினி மீடியாவைப்பார்த்து பயப்படக்காரணம் என்கிறார்கள் அவரது முகாமைச்சேர்ந்தவர்கள்.

  தெளிவுடன் பேசிய ரஜினி

  தெளிவுடன் பேசிய ரஜினி

  ரஜினி பேச்சு இன்று மிகத்தெளிவாக இருந்தது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதில் மிகத்தெளிவுடனே ரஜினி பேசியுள்ளார் என்கிறார்கள் பிற அரசியல் கட்சியினர். ஆனால், ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

  அரசியல் பேச வேண்டாம்

  அரசியல் பேச வேண்டாம்

  வலுவான கட்சியாக உருவெடுத்தபின்தான் அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வோம், போராட்டம் செய்வோம் என்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அதுவரை அரசியல் பேசவேண்டாம் என்ற முடிவு விமர்சனத்திற்குள்ளாகும் என்றே பார்க்கப்படுகிறது.

  எப்படி அமையும் அரசியல் பாதை

  எப்படி அமையும் அரசியல் பாதை

  சிஸ்டத்தை மாற்றனும் என்று அழுத்தமாக பேசிய ரஜினி, பேசி முடிக்கும் போது கடைசியில், ஜெய்ஹிந்த் என்று அவரது ஸ்டைலில் சொல்லி முடித்தார். சூப்பர் ஸ்டாராக ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கும், ஆனால் அரசியல்வாதி ரஜினியை எல்லோருக்கும் பிடிக்குமா? இன்னும் சில ஆண்டுகள் அவரது நடவடிக்கைப்பொருத்தே அரசியல் பாதை அமையும் என்று சொல்லலாம்.

  உற்சாகமான 2018ம் ஆண்டு

  உற்சாகமான 2018ம் ஆண்டு

  ரஜினி இந்த ஆண்டின் இறுதியில் 21 ஆண்டுகளாக கேலி பேச்சுகளாக இருந்து வரும் தனது அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2018ம் ஆண்டை உத்வேகமான ஆண்டாக அரசியல் கட்சிக்கான பணியை முன் எடுக்கும் ஆண்டாக ரஜினி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini is totally different from past 5 days whether in his speech and body language too today after his political entry announcement

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற