லைக்கா ராஜூ மகாலிங்கம் மன்ற செயலர்.. கார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் ரஜினி கட்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் ரஜினி கட்சி? | Oneindia Tamil

  சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக லைக்கா நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி தொடங்கப் போகும் கட்சி ஹைடெக் கார்ப்பரேட் கட்சியாக உருவாக்குகிறாரோ என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். இதன் முதல் கட்டமாக ரஜினி ரசிகர் மன்ற செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

  ராஜூ மகாலிங்கத்துக்கு பதவி

  ராஜூ மகாலிங்கத்துக்கு பதவி

  பல இடங்களில் 'ஆட்சேர்ப்பு முகாம்களை' ரஜினி ரசிகர்கள் நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜூ மகாலிங்கம் ரஜினி மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  ரஜினியின் கார்ப்பரேட் கட்சி?

  ரஜினியின் கார்ப்பரேட் கட்சி?

  கார்ப்பரேட் நிறுவன அதிகாரியாக இருந்த ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக்கப்பட்டுள்ளார். இதனால் ரஜினி தொடங்கும் கட்சியும் ஒரு கார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

  இரண்டும் கலந்த கலவை

  இரண்டும் கலந்த கலவை

  ரஜினிகாந்த ஆன்மீக அரசியல் என பழமைவாத கோட்பாட்டை முன்வைக்கிறார். இன்னொருபக்கம் கார்ப்பரேட்டர்கள் ராஜூ மகாலிங்கம் போன்றவர்களை மன்றத்தின் செயலாளராக நியமிக்கிறார். ஆன்மீகம் ப்ளஸ் கார்ப்பரேட் என இரண்டும் கலந்த கலவையாக பிறப்பெடுக்கிறது ரஜினிகாந்தின் கட்சி.

  கமலின் புதிய கட்சி

  கமலின் புதிய கட்சி

  கமல்ஹாசன் வரும் 21-ந் தேதி கட்சியை அறிவிக்க இருக்கிறார். நாளை நமதே என்ற முழக்கத்துடன் வலம் வரும் கமல்ஹாசனை ரஜினியின் ஆன்மீகம் ப்ளஸ் கார்ப்பரேட் ஸ்டைல் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் அரசியல் களத்தின் எதிர்பார்ப்பு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Raju Mahalingam who was in Lyca Company now appointed as secretary of Rajini Makkal Mandram.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற