சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறி ஆங்காரமாக கத்திய ரஜினி!
தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என படு ஆவேசமாக ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என சென்னை விமான நிலையத்தில் படு ஆவேசமாக மீண்டும் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி பிரஸ்மீட்டில் ரஜினி பேசியது சர்ச்சையானது குறித்து செய்தியாளர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில், தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம். பிரச்சனை தொடங்கியதே சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்தப்பிறகுதான்.

தீ வைத்தது சமூக விரோதிகள்தான்
சமூக விரோதிகள் தான் கலெக்டர் அலுவலகத்தை சூறையாடிது. அவர்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்ததும் சமூக விரோதிகள் தான்.

கடைசிநாளில் நுழைந்தனர்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நுழைந்துள்ளனர். போராட்டத்தை கெடுத்தது சமூக விரோதிகள்தான். என்று கூறினார் ரஜினிகாந்த்.

எனக்கு தெரியும்
சமூக விரோதிகள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள், எனக்கு தெரியும். என்று திட்டவட்டமாக கூறினார்.

காவல்துறையினரை தாக்கினர்
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காவல்துறையினரை சமூக விரோதிகள் தான் தாக்கினர்.

சுடுகாடாகிவிடும்
சமூக விரோதிகள் மீது தமிழக அரசும் காவல்துறையினரும் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விரைவில் வெளி காட்ட வேண்டும். எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்.

ஒருமையில் கத்தியபடி
இவ்வாறு ஆவேசமாகவும் கோபமாகவும் பேசிய ரஜினிகாந்த் ‘ஏ‘ என ஒருமையில் கத்தியபடி, வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என கேட்டுவிட்டு பிரஸ்மீட்டை பாதியிலேயே முடித்துக்கொண்டு வேகமாக சென்றார்.

படுகோபம்
இதுவரை பல்வேறு பிரஸ் மீட்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த் சிரித்தபடியே பொறுமையை கையாண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் படுகோபமாகவும் ஆவேசமாகவும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications