ரஜினி எங்களை சொல்லல.. திமுகவை சொல்லியிருக்கலாம்.. எஸ்கேப்பான ஜெயக்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகடிர் ரஜினிகாந்த் திமுகவை விமர்சித்திருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக மக்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அரசியலுக்கு வரலாம்

அரசியலுக்கு வரலாம்

மேலும் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மக்கள்தான் இறுதி எஜமானர்கள்

மக்கள்தான் இறுதி எஜமானர்கள்

ஆனால் மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினிக்கு எனது வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு பின்னடைவில்லை

அதிமுகவுக்கு பின்னடைவில்லை

வாழ்த்து தெரிவிப்பது தமிழர் மரபு, எனவே ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து கூறுகிறேன் என்றும் ஜெயக்குமார் கூறினார். ரஜினியின் வருகையால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுகவை கூறவில்லை

அதிமுகவை கூறவில்லை

தமிழகத்தில் ஓராண்டாக எதுவும் சரியில்லை என ரஜினி கூறியது அதிமுகவை இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அவர் அல்ல யார் அதிமுக என குறிப்பிட்டு கூறினாலும் அதற்கு அப்போது கருத்து கூறுகிறோம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

திமுகவை விமர்சித்திருக்கலாம்

திமுகவை விமர்சித்திருக்கலாம்

அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தி ரஜினி விமர்சிக்கவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமார், அது திமுகவாக கூட இருக்கலாமே என்றார். ரஜினி கூறியதை ஊடகங்கள் திசைதிருப்ப வேண்டாம் என்றும் ஜெயக்குமார் வேண்டுகோள்விடுத்துள்ளார். பொத்தாம் பொதுவாக கூறிய கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar says Rajinikanth did not criticize ADMK. He would have been criticized DMK.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற