நீண்ட நாள்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.... ரஜினிகாந்த் பூரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேற்று முதல் சந்தித்து வருகிறார். 5 நாட்களுக்கு சந்திக்கவுள்ளார்.

முதல் கட்டமாக கரூர், திண்டுக்கல், குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை நேற்று ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அண்ட விட மாட்டேன்

அண்ட விட மாட்டேன்

தொடக்க விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், அரசியலில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்னுடன் அண்ட விட மாட்டேன். மேலும் ரசிகர்கள் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

21 ஆண்டுகளுக்கு முன்பு

21 ஆண்டுகளுக்கு முன்பு

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினியின் மீது அரசியல் சாயம் பூசப்பட்டது. இதனால் அவர் ரசிகர்களுடனான சந்திப்பை நிறுத்திக் கொண்டார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு

8 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்தார். அதன்பிறகு தற்போதுதான் அவர் சந்தித்து வருகிறார். இதுகுறித்து ரஜினி தெரிவிக்கையில், நீண்ட நாள்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்து வருவதால் ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth has started to meet his fans from yesterday and it will be ended after 5 days. He says that he was very happy to meet his fans for a long time.
Please Wait while comments are loading...