தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார்.. நண்பர் ராஜ்பகதூர் பொளேர்
தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார் என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் கஷ்டத்தை ரஜினிதான் போக்குவார் என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனையைதான் முதலில் தீர்ப்பார் என்றும் அவர் கூறினார்.
ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சென்னையில் 5 நாட்கள் போட்டோர் எடுக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.

இது தமிழக மற்றும் தேசிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நாள்தோறும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் சன்நியூஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார். அதில் ரஜினியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என கூறினார்.
ரஜினிகாந்த் சம்பள விஷயத்தில் வெளிப்படையாக இருப்பவர் என்றும் அவர் கூறினார். தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் ரஜினிகாந்த் தீர்வு காண்பார் என்றும் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் ஏழைகள் பிரச்சனையை ரஜினிகாந்த் தீர்ப்பார் என்றும் அவர் கூறினார். ரஜினி அரசியலில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றும் அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
காசு பணம் சம்பாதிக்க பார்க்க ரசிகர்களை, ஊழல் செய்பவர்களை ரஜினிகாந்த் கிட்டவே சேர்க்க மாட்டார் என்றும் அவர் கூறினார். மேலும் ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையை தீர்த்து தண்ணீர் பெற்றுத்தருவார் என்றும் அவர் கூறினார்.
7 கோடி தமிழர்களும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு ரூபாய் கூட திருட மாட்டார் என்றும் திருடுபவர்களையும் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் ராஜ்பகதூர் உறுதியாக கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications