For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னட போராட்டக்காரர்களிடம் பவ்யம்.. தமிழக போராட்டக்காரர்களிடம் சீற்றம்.. ரஜினி மீது விமர்சனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காலா திரைப்படத்திற்கு எதிரான கன்னட போராட்டக்காரர்களிடம், கெஞ்சும் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை பார்த்து சீறுவதா என கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாரை தாக்கியது சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் ரஜினி அளித்த பேட்டியின்போது, 'யே' என பத்திரிகையாளர்களை பார்த்து கத்தினார்.

Rajinikanth Polite with Kannada protesters

பத்திரிகையாளர்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்ட நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வந்தும் அதை வாபஸ் பெறவில்லை.

ஆனால், நேற்று ரஜினிகாந்த் அளித்த ஒரு பேட்டியில், காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு கன்னட போராட்டக்காரர்களிடம் மிகவும் பவ்யமா, கன்னடத்தில் கோரிக்கைவிடுத்தார்.

இதுகுறித்த வீடியோவை டுவிட்டரில், ஷேர் செய்துள்ள ஜோதிமணி, கூறியுள்ளதாவது:

சரியான காரணத்திற்காக தமிழக மக்கள் போராடினால் அவர்கள் சமூகவிரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கச்சொல்லும் ஆக்ரோஷ அவதாரம். காலா படத்தை தடை செய்ய சொல்லி ஒரு கூட்டம் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் கன்னடத்தில் கம்யூனிகேட் செய்யும் அமைதி அவதாரம்! தமிழர்கள்தான் ஏமாளிகளா?!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Asked Kannada protesters on the film Kaala, Rajinikanth kept polite words, while he shout against those who fought against the Sterlite plant in Tuticorin says, Jyotimani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X