மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து உற்சாகப்படுத்திய ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து உற்சாகப்படுத்திய ரஜினி

  சென்னை: மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களை மாடியிலிருந்து பார்த்து கையசைத்த ரஜினி, அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

  ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியுடன் ஒரு முறையாவது சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர்.

  இதெல்லாம் ஒரு லட்சியமா? என்ற கேள்விக்கு, ஆன்மிகவாதி, நல்ல மனிதர், மக்கள் சிந்தனையாளர், பழையதை மறக்காதவர் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்வதில் என்ன தவறு உள்ளது என்கிறார்கள்.

  5 மாவட்ட ரசிகர்கள்

  5 மாவட்ட ரசிகர்கள்

  ரஜினிக்காக தொடங்கப்பட்ட ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு கடந்த மே மாதம் மாவட்ட வாரியாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினி 5 நாள்கள் போட்டோ எடுத்துக் கொண்டார்.

  ரஜினி தரிசனம்

  ரஜினி தரிசனம்

  ரஜினியை ஒரு முறையாவது பார்த்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் அனுமதி சீட்டு இல்லாமலும் திருமண மண்டப வாயிலில் கூட்டம் அலைமோதியது. போலீஸாருடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. எனினும் எடுக்க முடிந்தவர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

  ரஜினி அறிவிப்பு

  ரஜினி அறிவிப்பு

  மீண்டும் ரஜினி காலா படத்துக்கு பிறகு அக்டோபர் மாதம் பிற மாவட்ட ரசிகர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் காலா படம் தாமதத்தால் கடந்த 26-ஆம் தேதி முதல் இன்று வரை ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 6 நாட்களுக்கு திருமண மண்டபத்தை ரசிகர்கள் மொய்த்து விட்டனர்.

  ரசிகர்கள் மகிழ்ச்சி

  ரசிகர்கள் மகிழ்ச்சி

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் ரஜினி அறிவித்தார். மேலும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் ரசிகர்கள் மகிழிச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பிளையிங் கிஸ்

  பிளையிங் கிஸ்

  ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்தவுடன் திருமண மண்டபத்தின் பால்கனிக்கு வந்தார். அவரை பார்க்க கேட்டுக்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்த ரஜினி கையசைத்தார். அப்போது மரத்தில் தொங்கி கொண்டிருந்த ஒரு ரசிகரை இரு கைகளால் வாழ்த்தி இறங்குமாறு கூறினார். மேலும் சில நிமிடங்கள் அங்கிருந்த ரஜினி இறுதியாக பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டார். இதனால் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்தனர். இது வரை ரஜினி இதுபோல் மாடியில் நின்று கொண்டு கையசைத்ததில்லை என்பதால் ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth announces his political entry to his fans in Ragavendra Kalyana Mandapam. He also waves his hands and gives flying kiss to the fans who were standing out of Mandapam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற