கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1991-முதல் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவி காலத்தில் அவரது ஆட்சி அதிகாரத்தால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அந்த நேரத்தில் தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார்.

மக்களின் வரிப்பணத்தில் இதுபோன்று நடத்தப்பட்ட திருமணத்தால் அதிமுக மீது தமிழக மக்களுக்கு கோபம் இருந்தது. அப்போது பாட்ஷா படம் வெளிவந்த நிலையில் ஒரு விழாவில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்தை ரஜினி தெரிவித்ததால் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திமுக -தமாகா கூட்டணிக்கு வாய்ஸ்

திமுக -தமாகா கூட்டணிக்கு வாய்ஸ்

இந்த நிலையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றது. இதனால் ரஜினி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். அவரது வாய்ஸால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

ரஜினி அரசியலுக்கு வர கோரிக்கை

ரஜினி அரசியலுக்கு வர கோரிக்கை

அந்த காலகட்டத்தை பயன்படுத்தி ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி வாய்ஸ் மட்டும் கொடுத்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் வாய்ஸ் கொடுத்ததற்கே இத்தனை வெற்றி என்றால் ரஜினி களத்தில் இருந்திருந்தால் மிகவும் அருதி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது.

இனியாவது அரசியலுக்கு...

இனியாவது அரசியலுக்கு...

சரி 1995-இல் கிடைத்த நல்ல வாய்ப்பு ரஜினி நழுவ விட்டது போதும். இனியாவது அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது எண்ணம் நிறைவேறியுள்ளது. கடந்த மே மாதம் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றதால் அவரது அரசியல் களம் உறுதி செய்யப்பட்டது.

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் 2-ஆவது முறையாக கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சந்தித்தார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் நேற்றைய தினம் ஒட்டுமொத்த தமிழக மற்றும் ஆங்கில மீடியாக்களும் ரஜினி என்ன அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தன.

பொங்கலில் கட்சி பெயர்

பொங்கலில் கட்சி பெயர்

அப்போது ரஜினி செய்தியாளர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்தார். இதையடுத்து அவர் கட்சியின் பெயர், கொடி குறித்த ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று அவர் கட்சி பெயர் குறித்து அறிவிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி. அதுபோல் தமிழக மக்களுக்கு ஒரு வழி பிறக்க தனது கட்சியின் பெயரை பொங்கல் திருநாளன்று அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinkanth will announce his political party's name in Pongal festival. Yesterday he announced and ensured his political entry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X