For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பள்ளி பெயர் பலகைகளில் "உபயம்: டாஸ்மாக்" என எழுதவும்- அமைச்சர் வீரமணியை கிண்டலடித்த ராமதாஸ்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் வருமானத்தால்தான் பள்ளிகள் கட்டப்படுகிறது என்றால் அந்த பள்ளிகளின் பெயர் பலகைகளில் "உபயம்: டாஸ்மாக்" என எழுதிவிட வேண்டியது தானே என்று ராமதாஸ் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நேற்று முன்தினம் நடந்த பள்ளித் திறப்பு விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கு குடித்துவிட்டு முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வருமானம்

வருமானம்

அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது ரகளையில் ஈடுபட்ட அந்த முதியவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்றார். ஒரு அமைச்சர் இதுபோல் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதுவும் அரசு வருமானத்துக்காக அவர்கள் குடிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாக்குறுதி

வாக்குறுதி

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சா இது என பொதுமக்களும் பொங்குகின்றனர். மேலும் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என்றும் கேட்டனர்.

டாஸ்மாக் உபயம்

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் பள்ளிகளை கட்டுகிறோம்; ஆசிரியர்களுக்கு ஊதியம் தருகிறோம்: அமைச்சர் வீரமணி - அனைத்துப் பள்ளிகளின் பெயர் பலகைகளிலும் ‘உபயம்: டாஸ்மாக்' என்று எழுதவும், ஆசிரியர்கள் தினமும் 100 முறை ‘டாஸ்மாக் துணை' என்று எழுதவும் ஆணையிடாதவரை சரி! என்று ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss criticises the comment of Minister Veeramani, Government is giving salary to teachers and opening new schools only because of Tasmac income. So let them drink.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X