• search

காவிரி விவகாரத்தில் 30ம் தேதி கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம்: ராமதாஸ்

By Mohan Prabhaharan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிவடையும் நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றவேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த ஆறு வாரக் கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அதற்கான போராட்டம் தீவிரமாகியுள்ளது.

  இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் ஒரு முறை தமிழர்கள் முதுகில் குத்த தயாராகும் மத்திய அரசைக் கண்டித்து அனைவரும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

   தொடர்ந்து மறுக்கப்படும் நீதி

  தொடர்ந்து மறுக்கப்படும் நீதி

  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் கணக்கிட முடியாதவை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்தது. 2014-ஆம் ஆண்டில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாவது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

   எந்த நடவடிக்கையும் இல்லை

  எந்த நடவடிக்கையும் இல்லை

  அவற்றையெல்லாம் கடந்து 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி கடந்த மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை செயல்படுத்துவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று வரை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்களே தவிர, மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

   காவிரி மேலாண்மை வாரியம்

  காவிரி மேலாண்மை வாரியம்

  காவிரி ஆற்றை கர்நாடகம் நம்பியிருப்பதை விட தமிழகம் தான் கூடுதலாக நம்பியிருக்கிறது. தமிழகத்தில் பாசனத்திற்காக 19 மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் விவசாயக் குடும்பங்களும், குடிநீர்த் தேவைக்காக சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேரும் காவிரியை நம்பியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் இவர்கள் அனைவரின் வயிற்றிலும் மத்திய அரசு அடித்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தார்கள்.

   மத்திய அரசின் துரோகம்

  மத்திய அரசின் துரோகம்

  அதேபோன்ற நிலைமை தொடர வேண்டும் என்று தான் மத்திய அரசு விரும்புகிறது போலிருக்கிறது. ஒரு தேர்தல் வெற்றிக்காக ஒரு மாநிலத்தின் மக்களும், விவசாயிகளும் இறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு மத்திய ஆட்சியாளர்களின் மனம் கல்லாக மாறியிருக்கிறது. அவர்களின் துரோகத்திற்கு தமிழகத்தை ஆளும் அடிமை பினாமிகளும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள்.

   அரசியல் சார்பற்ற போராட்டம்

  அரசியல் சார்பற்ற போராட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல்கட்டமாக வரும் 30ம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்த வேண்டும். இது அரசியலுக்காகவோ, அரசியல் கட்சியின் சார்பிலோ நடத்தப்படும் போராட்டம் அல்ல. மாறாக உழவர்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். அரசியல் சார்பற்ற இப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.

   தொடரும் போராட்டம்

  தொடரும் போராட்டம்

  அதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. உழவர் அமைப்புகள் அறிவிக்கும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு அளிப்பதுடன், அந்த போராட்டங்களிலும் பங்கேற்கும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பல வழிகளில் பா.ம.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Ramadoss requests people to hoist black flag on March 30th at their homes. PMK Founder Ramadoss asked people to oppeose Central Government on cauvery issue by hoisting black flags on home.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more