கடல்பாசிக்கு தடை... வனத்துறையினருக்கு எதிராக மீனவப் பெண்கள் ஆர்பாட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனவப் பெண்கள் தீவுப் பகுதிகளில் கடல் பாசி எடுப்பதை தடுக்கும் வனத்துறையினரைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மீனவப்பெண்கள் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் சென்று அங்கிருக்கும் கடல்பாசியை எடுத்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் கடல் பாசியை எடுக்கக் கூடாது என தடை போடுகின்றனர்.

Ramanathapuram fisher women protested in district collector office

அந்த தடையை மீறி பாசி எடுப்பவர்களிடம் பல ஆயிரங்கள் அபராதம் வசூலிக்கின்றனர். மேலும், அவர்களை தகாத வார்த்தைகளால் கூறி மிரட்டுகின்றனர் என்பதால் பெண்கள் வனத்துறை அதிகாரிகளைக் கண்டால் அச்சப்படும் நிலை உருவானது.

அதையடுத்து, வனத்துறையினரின் இந்தப் போக்கைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனத்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், வனத்துரையினர் மீது மவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிடில் வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

காலம் காலமாக கடல் தீவை பாதுகாத்து வரும் மீனவ மக்களை தீவுக்குள் செல்லக் கூடாது என்று கூறுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என அம்மக்கள் உறுதியாகக் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramanathapuram fisher women protested in district collector office against forest department officials.
Please Wait while comments are loading...