ரேஷன் பொருட்களை ரத்து செய்யப்போகிறார்கள்.. ஒரு வருடம் முன்பே கூறிய திருமுருகன் காந்தி.. வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படிப்படியாக ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்படப்போகிறது, பொது வினியோகத்தை மூடப்போகிறார்கள் என்று, ஒரு வருடம் முன்பே மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறிய வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

ரேஷன் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலான உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுள்ள தமிழக அரசு அதுகுறித்து அரசிதழில் இன்று வெளியிட்டது. இதனால் மக்களிடம் பீதியேற்பட்டுள்ளது.

Ration system will get distrubed in Tamilnadu, says Tirumurugan Gandhi

இந்த நிலையில் திருமுருகன் காந்தி ஓராண்டு முன்பே பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில் திருமுருகன் காந்தி கூறியுள்ளதாவதுச

அரசு இனி அரிசியை சேமிப்பதோ, கொள்முதல் செய்யப்போவதோ இல்லை. இந்திய விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்படும். ஆனால் அமெரிக்கா அவர்கள் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பார்கள். 2017க்கு பிறகு ரேஷன் கடைகளில் அரிசி கொடுக்கப்போவதில்லை. காஸ் மானியம் போல அரிசிக்கும் மானியம் கொண்டுவருவதாக அறிவிப்பார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இனி அரிசி மலிவு விலையில் கிடைக்காது.

அதேநேரம் வெளிநாட்டிலிருந்து அரிசியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வார்கள். உர மானியம், மின்சார மானியம் எதையும் இந்திய விவசாயிகளுக்கு அரசு தரப்போவதில்லை என்பதால் நமது விவசாய உற்பத்தியின் விலை அதிகமாக இருக்கும். இதனால் நமது விவசாயிகள் அழிவை நோக்கி செல்வார்கள்.

இது மோடி அரசாங்கத்தின் குற்றம் மட்டுமல்ல, எதிர்க்கட்சியான காங்கிரசும் இதை பற்றி பேசவேயில்லை. 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவும் பேசவில்லை. திமுகவும் பேசவில்லை.

உலக வர்த்தக சபையில் இந்தியா கையெழுத்திட்டது பற்றி மிக ரகசியமாக வைத்துள்ளார்கள். பொது வினியோகத்தை மூடப்போகிறார்கள். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு திருமுருகன் காந்தி பேசிய வீடியோ இப்போது வைரலாகிறது. தற்போது திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ration system will get distrubed in Tamilnadu, says Tirumurugan Gandhi even one yeaar back.
Please Wait while comments are loading...