வாட்ஸ் அப்பில் ‘கொலை’ பற்றிய செய்திக்கு ‘தம்ஸ் அப்’ போட்டதற்காக டிஸ்மிஸ் செய்வதா? ஐகோர்ட் தீர்ப்பு!
மதுரை: வாட்ஸ்ப் அப் குழுவில் கொலை பற்றிய செய்திக்கு'தம்ஸ் அப்' எமோஜி பதிவிட்டதற்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தனி நீதிபதி ரத்து செய்தது சரி என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர், காவலர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்தி ரயில்வே பாதுகாப்பு படையின் அலுவலக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. அதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சவுகான், 'தம்ஸ் அப்' எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நரேந்திர சவுகான், காவல் அதிகாரி கொலைக்கு 'தம்ஸ் அப்' எமோட்டிகானை பதிவிட்டது உயர் அதிகாரி கொலையை கொண்டாடும் விதமாக இருப்பதாகக் கூறி, அவருக்கு மெமோ வழங்கப்பட்டது. தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நரேந்திர சவுகான் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கத்தை எதிர்த்து நரேந்திர சவுகான் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, நரேந்திர சௌகான் பணி நீக்கத்தை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இதற்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தம்ஸ்அப்' குறியீடு என்பது 'ஓகே' என்பதன் மாற்று குறியீடு ஆகும். 'தம்ஸ்அப்' குறியீட்டை அதிகாரியின் கொடூர கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது.
மேலும் கொலை செய்தியை மனுதாரர் அனுப்பவில்லை. வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை பார்த்து, அந்த தகவலை பார்த்துவிட்டதற்கான அத்தாட்சியாக 'தம்ஸ் அப்' குறியீட்டை பதிவிட்டுள்ளார். மனுதாரர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை. மனுதாரரின் விளக்கம் ஏற்புடையதாகவே இருக்கிறது.
எனவே, மனுதாரரின் பணி நீக்கத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications