For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தீபா வேட்புமனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. படிவம் 26ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

RK Nagar Bypoll: Deepa nomination paper rejected

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தீபாவின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் நீடித்தது.

இந்த நிலையில் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். படிவம் 26ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த போதே தனது மனு நிராகரிக்கப்படும் என்று தீபா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Independent candidate Deepa's nomination paper rejected in RK Nagar byelection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X