மூத்த அரசியல்வாதி டி.எம் காளியண்ணனின் 98வது பிறந்தநாள்... டிடிவி தினகரன் டுவிட்டரில் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்திலும் தமிழக முதல் சட்டசபையிலும் உறுப்பினராக இருந்த டி எம் காளியண்ணனின் 98வது பிறந்தநாளையொட்டி ஆர்கே நகர் எம்எல்ஏ தினகரன் டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1957 மற்றும் 1962ல் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டவர் காளியண்ணன். 1967ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மேலவையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் விளங்கினார்.

கல்லூரி மாணவராக இருந்த போதே அரசிய ஈடுபாடு காரணமாக வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்தில் தங்கி காந்தியடிகளுடன் 12 நாட்கள் சேவை செய்து அவரிடம் பயிற்சியும் பெற்றுள்ளார்.

விவசாய வளர்ச்சி அமைப்பு உருவாக்கியவர்

விவசாய வளர்ச்சி அமைப்பு உருவாக்கியவர்

60 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணகி விழாவை திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து நடத்தி வரும் பெருமை காளியண்ணனையே சேரும். நீர்பாசனத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியதோடு பல கால்வாய்களை ஏற்படுத்தி பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்களை விளை நிலங்களாக மாற்றியுள்ளார். விவசாய வளர்ச்சியும் கூட்டுறவு அமைப்புகளின் உருவாக்கமும் இவரின் உயிர்த் திட்டங்களாக விளங்கின.

முன் உதாரணமாக அரசியல்வாதி

முன் உதாரணமாக அரசியல்வாதி

தனது சொந்த நிலத்தில் பெரும்பகுதியை கல்வி நிலையங்கள்,கோவில் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் தந்துள்ளார். இன்றைய அரசியல் தலைவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணமாகத் திகழும் காளியண்ணன் இன்று தனது 98வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தினகரன் சொன்ன வாழ்த்து

இதனையொட்டு ஆர்கே நகர் எம்எல்ஏ தினகரன் டுவிட்டரில் டி.எம்.காளியண்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்த பெரியவர் டி எம் காளியண்ணன் அவர்கள் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்

நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகள்

நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகள்

கல்விக்கும் விவசாயத்திற்கும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. அவருக்கு எனது உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ! அவர் நல்ல ஆரோக்யத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்! என்று தினகரன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
RK Nagar MLA TTV Dinakaran wished T.M.Kaliyannan on his 98th birthday as he is the first member of Tamilnadu assembly 1952 and first parliamentarian.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X