மக்களே உஷார் ! பூட்டிய டூவிலரை இப்படித்தான் திருடுகிறார்களாம்... வைராலாகும் ஒரு திருடனின் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து வாங்கும் ராயல் என்பீல்டு பைக்கை ஒரே ஒரு உதை உதைத்து சில நொடிகளில் பூட்டை உடைத்து வண்டியைத் திருடும் டெக்னிக்கை திருடன், போலீசார் முன்பு டெமோ செய்துகாட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முகநூலில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் போலீசார் திருடன் ஒருவனிடம் ராயல் என்ஃபீல்டு பைக்கின் லாக்கை திறக்குமாறு 'டெமோ' செய்து காட்டச் சொல்கிறார்கள். அதன்படி அவன் 'டெமோ' செய்து காட்டுகிறான். அதில் டீன் ஏஜில் இருக்கும் ஒரு இளைஞன் பைக்கின் ஸ்டேண்டுக்கு அருகில் ஓரிடத்தில் ஒரே ஒரு உதை தான் விடுகிறார். வண்டியின் 'லாக்' கழண்டு விடுகிறது.

Royal enfield bike lock opening video going viral

அதன்பிறகு வண்டியின் முன்பகுதியில் ஒரு வயரை பிணைத்து வண்டியை ஸ்டார்ட் செய்கிறார். வண்டி வழக்கம் போல் ஸ்டார் ஆகிவிடுகிறது. இந்த டெக்னிக்கைத்தான் வாகனத்தை திருடுவதற்கு பயன்படுத்துகிறார்களாம்.

பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ராயல் என்பீல்டு வண்டியின் விலை ஒன்றை லட்சத்தில் இருந்து சில லட்சங்கள் வரை விற்கப்படுகிறது.

லட்சங்கள் செலவழித்து வாங்கப்படும் வண்டி, ஒரே உதையில் திருடப்படுகிறது. வைரலாகி வரும் இந்த 'டெமோ' வீடியோவை பல்லாயிரக்காணக்கானோர் கண்டுள்ளனர். பல ஆயிரம் பேர் ஷேர் செய்து வருகின்றனர். இனி, ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைப்பதுதான் பாதுகாப்போ!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video going viral in internet. Royal En field bike lock opened just by a kick. Thousand and thousand shares going in face book.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற