திவாகரனின் கல்லூரியில் ரூ.25 லட்சம் பறிமுதல்.. பேராசிரியையிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன.

சசிகலாவின் உறவினர்கள் வீடுகளை நேற்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். மொத்தம் 190 இடங்களில் நடைபெற்ற சோதனையில் தற்போது 40 இடங்களில் சோதனை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

Rs. 25 Lakhs seized in Diwakaran's college

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்குச் சொந்தமாக சுந்தரக்கோட்டையில் செங்கலத்தாயார் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு 2-ஆவது நாளான இன்றும் சோதனை நடைபெற்றது.

அப்போது ரூ.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கம் மற்றும் வைர நகைகளும், 5 ரோலக்ஸ் வாட்ச்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி பேராசிரியை அன்பரசியிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials seized Rs. 25 Lakhs and some gold and diamond ornaments in Diwakaran's college.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற