தமிழக பட்ஜெட்: சத்துணவு, பெண்கள், குழந்தைகள் நலம் காக்க, சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்துணவு திட்டம், குழந்தைகள், பெண்கள் நலம் ஆகியவற்றை கவனிக்கும் சமூக நலத் துறைக்கு ரூ. 4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதற்கு பின்னர் 2017- 2018 -ஆம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.

Rs. 4,781 crores for Social Welfare Department

அவை தொடங்கியதும் திருக்குறளை வாசித்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சமூக நலத்துறையின் சத்துணவு திட்டம், சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வேளாண் இயந்திரங்களை வாடகைக்குவிட கூடுதலாக 500 மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் தோட்டக்கலைத் துறையின் 34 லட்சம் ஏக்கர் பரப்பளவை 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படுகிறது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs.4,781 Crores has been allocated for Social Welfare Department.
Please Wait while comments are loading...